செந்தில் கவுண்டமணியிடம் கேட்க மறந்த கேள்வி
12-3-2007, காலைவேளை.
என்னடா இது சன்டே மட்டும் இவ்ளோ குட்டியா இருக்குனு
கம்ப்ளைன் பண்ற கூட்டத்துல நானும் ஒருத்தன். மன்டேஸ்ல
தயங்கி தயங்கி வேலைகள ஆரம்பிக்கிறவன்.
இப்போ என்னோட சிந்தனையெல்லாம், "ஏன் நான் இப்படி
லீவுக்காக அலையுறேன்? 'செய்வதைத் திருந்தச் செய்!
அதையும் இக்கணமே செய்!'-ங்கிற கொள்கையெல்லாம் எங்கப்போச்சி??"-ங்கிறது தான்!
டாய் டாய் டாய் அடங்குடா. கொள்கை, குறிக்கோள்னு ரொம்ப
அலட்டிக்காதே-னு சொல்றது எனக்கு கேக்குது. இருந்தாலும்
நான் இதை சொல்லாம விடப்போறதில்லனு முடிவு
பண்ணிட்டேன்.
தினமும் நாம ஏன் எப்போ வொர்க்கிங் டைம் முடியும், ரெஸ்ட்
எடுக்கலாம்னு பாக்கறோம்? ஏன் ஒவ்வொரு வாரமும் எப்போ
ஃப்ரைடே வரும், ரெண்டு நாள் லீவ் கெடைக்கும்னு
பாக்கறோம்? ஏன் எப்படா இந்த ப்ரொஜக்ட் முடியும், தூக்கிப்
போட்டுட்டு எங்கேயாவது வெகேஷன் போலாம்னு பாக்கறோம்??
எனக்கு தெரியும் இந்த எல்லா கேள்விக்குமே எல்லார்கிட்டேயும்
ஒரு நியாயமான பதில் இருக்கும்.
ஆனா நாம யாரும் ஏன் எப்போடா நம்ம லைஃப்டைம் முடியும் நிம்மதியா தூங்கலாம்னு யோசிக்கிறதில்ல??
Saturday, March 17, 2007
Subscribe to:
Posts (Atom)