Friday, September 29, 2006

The Owl

செவ்வாய்கிழமை, இரவு 9.40 மணி..
உணவகத்திலிருந்து பிரதான அலுவலகக் கட்டிடத்திற்கு திரும்பும் வழி...

விளக்குக்கம்பத்தில் அமைதியாய் அமர்ந்திருந்தது ஓர் ஆந்தை..
ஆச்சரியத்தில் நான்.. முதன்முறையாக நேரில் காண்கிறேன் அதை!!

என்னடா இது!! காட்டுக்குள்ளே தானே இருக்கும் இது..
இந்த இடம் என்றிலிருந்து காடானது??

இங்குள்ள பலரது வாழ்க்கை வறண்டவிட்டதாலா?? - அப்படி
இருப்பின் பாலைவனமாக தானே மாறியிருக்க வேண்டும்... - இப்படி

மொக்கையான சிந்தனைகள்....
"யே ஆந்தையே! இங்கே ஏற்கனவே உழைத்துக்கொண்டிருக்கின்றன பல ஆந்தைகள்..
நீ அவர்களுக்கு சகிதனாகப் போகிறாயா??" - என்று வினவ ஆசை எனக்கு!!

வியப்புடன் அதன் இன்முகம் நோக்கி முறுத்தவாறே சென்றேன், கடந்து...
அவ்வாந்தையின் நினைவு அகல மறுத்த்தது, மனதிலிருந்து...

என் உளக்கேள்விகளைப் படித்திருக்குமா, அது?? - அற்பச் சிந்தனை எனக்குள்..
இருப்பின், என்ன நினைத்திருக்கும் தனக்குள்??

"நாள் முழுதும் எந்திரத்துடன் பேசிக் கொண்டிருப்பதாலா,
இவனுக்கு இயற்கை புதுமையாய் தெரிகிறது" - என்றா
அல்லது,
"கணினிமொழி பேசிப்பேசி வாய்மொழி மறந்தானோ இவன்,
தனக்குள்ளேயே கதைத்து நெகிழ்கிறான்" - என்றா??

புதிதாய் தான் இருந்தது அந்த செல்லநடை!
இனிதாய் தான் இன்னும் இருக்கிறது அந்த இரண்டு நிமிட நினைவுகள்!! :)

6 comments:

Nivi said...

hey once me n mat saw tht owl.. we wer about to take a snap of it, but it felw off...

hey nice narration.... kallakre po

Bala said...

mama ennala padikkave mudiyala da. .

Thiru said...

oh, is it.. if you see that owl again, nivi, sure take a snap.. :)

bala, try pannuda please..
மனமிருந்தால் மார்க்கபந்து!! he he he..

Girl of Destiny said...

asathitta thiru...naangalum adha paathom....aana ipdi ellam thonave illa!
First time I saw it was sitting on that convex glass frame. I was walking alone from canteen. I passed quite near the glass and saw this cuuuuuuuuuuuute owl there. I walked by, but never took my eyes off it, and the owl never took it's big round eyes off me either! It turned it's head a whole 180 degrees and kept watching me...I walked backwards and forwards looking at it. And it never wavered in its glance! At that moment I felt I shared a special little bond with that little creature of the night! Just me and the owl in that concrete jungle. A lovely moment when we're in touch with the Soul of the World, don't you think?

Girl of Destiny said...

um....pardon....but I did not realise that my previous comment will be that big a COMMENT!

Thiru said...

That's really BIG, Mathi!!

Enakkum adha paakkum bodhu yedho ennanne solla theriyaadha oru feeling irundhadhu... konjam sandhosam, konjam aacharyam, konjam bayam.. romba pudhusa irundhadhu andha feelings.. :)